என்ன தான் கோடி…மில்லியன்…பில்லியன் என்று வந்தாலும் இந்த ஆயிரம் என்பதற்கு நல்ல மவுசு இருக்கத்தான் செய்யுது..
ஆயிரம் காலத்துப் பயிர் என்று கல்யாணத்தை சொன்னவர்கள் ஏன் பத்தாயிரம் காலத்துப் பயிர் அல்லது கோடி காலத்துப் பயிர் என்றோ கூறவில்லை???
யோசிக்க வைக்கிறதே…!!!!
குற்றாலம் அழகு… அதிலும் அந்த அருவி..அழகோ அழகு… அதை
பாக்கவே..ஆயிரம் கண் போதாது என்று ஒரு பாடல் வரிகள் வந்து
அந்த ஆயிரத்துக்கும் மவுசு ஏத்துது..
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..உனக்கு நீதான் நீதிபதி… இது TMS கணீர் குரலில்
ஒலிக்கும் தத்துவப் பாடல்..
ஆயிரம் Underline செய்து படிக்கவும்.
சரி TMS அப்படி என்றால்… SPB கதையே தனி.. ஒரு நிலவைப் பாத்து ஓராயிரம் நிலவே வா என்று பாடி பல்லாயிரம் இதயங்களை இன்னும் நெகிழ வைத்து வருகிறார்.
சூரியனை மறைக்க ஆயிரம் கைகள் வருமா?? பதிலாய் வருமே நம்ம
வாத்தியார் பாட்டு..ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை…
பாரதிராஜாவின் மனத்தோட்டத்தில் ஆயிரம் தாமரைமலர்கிறது.. ஆனந்தக் கும்மியும் கொட்ட கெஞ்சுகிறது.
மதுரையின் ஆயிரம் கால் மண்டபம் வரலாற்றில் ஆயிரமாயிரம் கதை சொல்லும்.
அந்த காலத்து ஹிட் படம் ஆயிரத்தில் ஒருவன்..அதே பேரில்
இப்ப வந்த படமும் ஹிட் தான்..
ஆனால் உண்மையில் ஆயிரத்தில் ஒருவன் யார் தெரியுமா?? சடையப்ப
வள்ளல் தான். கம்பனை ஆதரித்த வள்ளல். நண்பரும் கூட..
அவரைப்பற்றித் தான் ஆயிரம் வரிகளுக்கு ஒருமுறை சடையப்பரைப் பற்றி பாட..அதுதான் உண்மையான ஆயிரத்தில் ஒருவன் என்ற வரி வரக் காரணம்.
அப்படியே கம்பர் ஒரு ஆயிரத்தை எப்படி கையாள்றார்னு பாக்கலாமா???
சீதையை பிரிந்து இராமன் வருந்தும் காலம். வழியில் ஜாலியாய்த் திரியும் மயிலைப்
பாக்கிறார்..இதற்கு முன்னால் இப்படி மயில்கள் இருக்காதாம். ஏன் தெரியுமா??
சீதையின் சாயலைப் பாத்து தோத்து வெட்கி பயந்து ஓடிப் போயிடுமாம்..
இப்போ சீதை இல்லாத காரணத்தால் இப்படி ஜாலியா ஆட்டம் போட்றீகளா?? –
இது ராமன் கேட்கும் கேள்வி.
மயில் தோகை பார்க்கிறார் கம்பன்…ராமன் வழியாய் வார்த்தைகள் வருகின்றன…
ஆயிரம் கண்கள் உள்ள (தோகை வைத்த) மயில்களே…. சீதையை எங்கே
கொண்டு சென்றார்கள் என்ற சேதி ஒரு கண்ணுக்குமா தெரியாமப்
போச்சு..சொல்லுங்களேன்..என்கிறார்..
பாட்டு இது தான்:
ஓடாநின்ற களிமயிலே சாய்ற்கு ஒதுங்க்கி உள்ளழிந்து
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ
தேடானின்ற என் உயிரைத் தெரியக் கண்டாய் சிந்தை யுவந்து
ஆடாநின்றாய் ஆயிரம் கண் உடையாய்க் கொளிக்குமாறுண்டோ.
ஆயிரம் தான் சொல்லுங்க…கம்பர் கம்பர் தான். சான்ஸே இல்லெ.