கார்த்திக் & ரமேஷ் கண்ணா டீம், செம காமெடி செய்வார்கள் ஒரு கோவிலுக்குள்.. ஞாபகம் இருக்கா??
கார்த்தி கையில் திருடின ஒரு உண்டியல். சாமி முன்னாடி விபூதி வச்சி ஒரு வட்டம் போடுவார். உண்டியல் காசெல்லாம் தூக்கி போட்டு, வட்டத்துக்குள் விழும் காசு எல்லாம் சாமிக்கு. மிச்சம் மீதி கொஞ்ச்சமா ஏதோ இருந்தா ..அது எனக்கு..
அதுக்கு பதிலுக்கு… ரமேஷ், சாமி .. உன்னையெல்லாம் ஒரு வட்டத்துக்குளே கொண்டு வர நான் விரும்பல்லே.. நானு எல்லாத்தையும் தூக்கி போட்றேன். உனக்கு வேணும்கிற எல்லாத்தையும் எடுத்துக்க.. எனக்கு ஏதோ கொஞ்ச்சம் குடு என்பார்..
சாமியை ஆசாமிகள் படுத்தும் பாடு…. படாத பாடு தான்.
சமீப காலமா கோவில் குளங்க்களில் கூட்டம் அதிகமா தென்படுது.. அதுவும் சிறப்பு பூஜைளில் சனி பகவான், குரு பகவான் இத்யாதி பூஜைகள் இன்னும் தடபுடலா நடக்குது.. வழிபாடுகளை விட பிராயசித்த தலங்கள் தான் இப்போ ரொம்ப பாப்புலர்.
என்ன வென்னாலும் தப்பு பன்னலாம். காசிக்குப் போய் அக்கவுண்டை Nil Balance க்கு கொண்டு வரலாம்கிற நம்பிக்கை நம்ம மக்கள் கிட்டே சூப்பரா பதிஞ்ச்சி போச்சு…
சமீபத்திய பிரதோஷம் அன்று அரக்கோணத்தில் இருந்தேன். கோவில் பக்கம் தலை காட்டப் போனா.. அது ஏதோ மகளிர் மாநாடே நடக்கிற மாதிரி… எங்கும் மகளிர் மயம்.. இரு பாலரும் வழிபட்ட பூஜை சமீப காலமா எப்படி மகளிர்க்கு போச்சி???.
இதுவும் சமீபத்திய மாற்றம் தான்..
வேண்டுதலில் பல ரகம்… பலர் கோவிலுக்கு போய் சாமி கிட்டே அகிரிமெண்டே போடுவாங்க… ஆனா ஒண்ணு… சொன்னதே கரெக்ட்டா செஞ்ச்சிடுவாய்ங்க.. இல்லாட்டி சாமி கண்ணு குத்திடாது??? அந்த பயம் மட்டும் தான் அந்த காலம் தொட்டு மாறாம இருக்கு.
ஆசாமி சாமியிடம் வேண்டுவது இப்படின்னா… ஓர் ஆசாமி..ஆசாமியிடம் வேண்டுவது பத்தி கொஞ்சம் பாக்கலாமா??
இதுவும் ஒரு பாசமலர் கதை தான்.. எந்த அண்ணன் தங்கை கதையாய் இருந்தாலுமே..அண்ணன் தங்கையிடம் ஏதாவது வேணுமான்னு கேக்கும். அதுக்கு ஒன்னோட பாசம் தான் பெருசு.. வேறு ஒண்ணுமே வேணாம்கிற மாதிரி
வரும்.
ஆனா ஒரு சேஞ்சுக்கு வித்தியாசமாய் தங்கை கேட்கும் இடம் வருது… கேக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் பிட்டு வேறே போடுது…
அண்ணா பெருசா உள்ளதை நீ வச்சிக்க… இத்துனூண்டா உள்ளதே எனக்குக் குடு..
இந்த உலகமாதா பெரிய்ய தாதா மாதிரி ஒரு பெரிய்யய பெல்ட் பொட்டிருக்காம்.. அது தான் கடலாம். பெல்ட்ன்னு சொன்னா கொஞ்சம் டிசைன் வேணுமே…இருக்கே..அதான் மீன்.
அது சரி..திடீர்னு உலகம் எதுக்கு?? அந்த உலகமே அன்னாந்து பாக்கிற ஒரு சங்கதி…ஒரு பெண்.. அவளோட முடிகூட தள்ளாடுமாம்… ஏன் தெரியுமா?? அவ பூ வச்சிருக்கா… பூ தேன் வச்சிருக்கு… அதிலிருந்து தேன் வடிஞ்சி அதை அந்த முடி சாப்புட்டு போதையில ஆடுதாம்…
அப்புறம் வழக்கம் போல் சின்ன இடை… அந்த மான் மாதிரி அழகி… அவளை நீ வச்சி விளையாடு.
ஆனா அவ கூட ஒரு பொடியன் இருக்கான்… நீ தான் வீரனாச்சே … நீ வீரன்னு எனக்கு தெரியும். உலகம் தெரிஞ்சிக்க வேணாமா??? அந்தப் பொடியனைப் பிடிச்சி எனக்கு விளையாடக் குடு.
கேட்ட அந்த பாசக்காரப் பயலுக யார் யார் தெரியுமா??
சூர்ப்பநகை & இராவணன்..
சீதை & ராமனைக் குறித்து சூர்ப்பனகை கேட்டது என்பது தான் தெரிஞ்ச்சிருக்குமே..
இதோ கம்பரின் வரிகள்:
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன் கொண்டு ஊடாடு கூந்தல் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ உன் வான் வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும் வண்ணம் இராமனைத் தருதி என்பால்.
இந்தியா முழுக்க லோக் பால் பத்தி யோசிக்க.. நானு இந்த என்பால் பத்தி யோசிக்கிறேன்…
மீண்டும் வருகிறேன்