கருப்பு தான் எனக்குப் பிடித்த கலரு என்று ஒரு பாட்டு பாடி அனுராதாஸ்ரீராம் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆயிட்டாங்க… [ஆனா அவங்க கலர் ஒன்னும் கருப்பு கிடையாது… நல்ல கலர் தான்]. ஆனா அந்தப் பாட்டில் கருப்பா இருக்கும் எல்லாத்தையும் புடிச்சி ஒரு பெரிய்ய்ய்ய லிஸ்டே போட்டிருப்பாங்க…
எல்லாத்தையும் தூக்கிக் சாப்பிடும் ஒரு டயலாக் வடிவேல் காமெடியில் வரும் அவன் பயங்கர கருப்பா இருப்பான் ஆனா நீ கருப்பா பயங்கரமா இருக்கே…
எது எப்படியோ கருப்புக்கு நம்மாளுங்க இவ்வளவு வக்காலத்து வாங்கினாலும் மார்க்கெட்டில் அதன் வேல்யூ கம்மி தான். அது கல்யாணமாய் இருந்தாலும் சரி வேறு எதுவாய் இருந்தாலும் சரி..
சுனாமி வந்த ஞாயிறை கருப்பு ஞாயிறு என்று தான் சொல்கிறார்கள்… சுனாமியை நேரில் பாத்த நமக்கு அப்படி ஒன்றும் அது அவ்வளவு கருப்பானதாய் தெரியலை…
இங்கே ஒரு கருப்பு பத்திய கம்பேரிஷன் வருது.. கொஞ்சம் பாக்கலாமே…
- அது தொட்டு உணரக் கூடியதாய் இருந்தது
- ஒரு விம் பார் போட்டு கழுவினா… பாத்திரமே விம் பார் மாதிரி ஆயிடுமாம்.. (அடே.. இதுவும் ஒரு கின்னஸ் ரெக்கார்ட் மாதிரி இருக்கே… )
- பல கருப்புத் தூண்கள் மாதிரி
- ஒரு மரத்தை வெட்டுவது மாதிரி (தேவைப்பட்டால்) வெட்டக் கூடியதாய் இருந்திச்சாம்…
- இத்தனைக்கும் பின்னாடி… பாக்குறதுக்கு சூப்பரா …இனியதாய் இருந்திச்சாம்…
இது எப்படி இருக்கு???
சிதையைப் பத்தி கேட்ட மாத்திரத்தில் ராவணன் வீட்டில் வந்த இருள் இப்படி இருந்ததாம்…
ஒரு சின்ன திருத்தம்… வந்த இருள் அல்ல… வரவழைக்கப் பட்ட இருள்…..
ஆமா… நான் ஆணையிட்டால் அந்த பிறை மறைந்து விட்டால் … ரேஞ்ச்சில் இராவணன் பாடாமல் ஆணை இட, பிறை அப்படியே மரை கலண்டு போய் ஓட…இருள் வந்ததாம்… இது கம்பனின் கற்பனை…
இதெல்லாம் எங்கே கம்பன் சொன்னான் ??? சும்மா சரடுன்னு .. யாராவது கேக்கிறீங்களா…??
அப்போ பாட்டும் போட்டுடறேன்… அரத்தம் புரிஞ்ச்சா படிங்க…இல்லாட்டி… அடுத்த போஸஸ்டிங்க் படிங்க…
ஆண்டு அப்பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம்
தீண்டதற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி
வேண்டின் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி
கதை கந்தல் ஆன மாதிரி ஏதோ கம்பர் சொல்ற மாதிரி இருக்கு இல்லே…???
மீண்டும் சந்திப்போம்