எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாடல்கள் பழைய சினிமா பாடல்கள்…. அதுவும் எல்லா லைட்டையும் அணைத்துவிட்டு ரம்மியமாய் குளிரும்படி ஃபேன் ஓட விட்டு லேசா கண்ணை மூடி பழைய பாட்டு கேட்டு பாருங்க… ஒரு கிறக்கமே வரும்.
என்ன… தூக்கம் வருமா???
மனுஷன் தூக்கம் வர்ரதுக்கு என்னென்னொமோ பண்றான்… தூக்கம் வந்துட்டா வந்துட்டுப் போகுது???
செந்தமிழ் தேன் மொழியாள் … பாட்டு.. எப்போ கேட்டாலும் இனிக்கவே செய்யுது… வார்த்தைகளுக்கு அடி பணிந்து நிற்கும் இசை தான் இதுக்கு காரணமா இருக்கலாமோ…
ரஹுமான் பாட்டும் மெலோடிகள் மட்டும் காலத்தை விஞ்சி நிக்கிறதுக்கும் இதுவும் ஒரு
காரணமா இருக்கலாமோ…
அது ஒரு பக்கம் இருக்கட்டும்… நாம மறுபடியும்… செந்தமிழ் தேன்மொழியாளுக்கு
போவோம்…அதுலே ஒரு வரி வரும் ..
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ!!!
நாயகனின் காதலி அழகி… அதிலும் பேரழகி. அவளைப் பாத்தா எல்லா ஆண்களுக்கும் ஆசை வரும்.. அது மட்டுமா..?? அவளைப் பாத்தா பெண்களுக்கும் கூட ஆசை வருமாம்…
ஒரு பெண் எவ்வளவு தான் அழகா இருந்தாலும்.. இன்னொரு பெண்ணுக்கு பிடிக்காது.. இது தான் உலக நியதி… அதையும் மாத்தி யோசிக்கிறாங்க நம்ம கவிஞர்கள்…
Objection TNK…
எவ அவ…
இன்னொரு Objection…. நான் அவ… இல்லை…அவர்.
கம்பர் என் பேர்…
“ஏன் அடிக்கடி நானு ஏதாவது கலாய்க்கிறப்போ வர்ரீங்க??”
என்னோட மேட்டர் எடுத்து உட்டா நான் வர மாட்டேனா..?? ஏதோ அந்தக் காலத்துலே காப்பி ரைட் இல்லை…அதனால அப்பொப்போ வந்து சொல்ல வேண்டி இருக்கு…
கம்ப ராஜா…சாரி…சக்ரவர்த்தி... இப்போ என்ன சொல்ல வாரீக…?. சமாதானமாய் நான்.
ஏதோ பொண்ணுக்கு பொண்ணு ஆசைப்பட்டது பத்தி எழுதிட்டே போறே..?.
ஆமா… அது என்ன தப்பா…? – இதுவும் நான் தான்.
கம்பர் தொடர்கிறார்:
இதை நாமளும் தான் எழுதி இருக்கோமில்லை… அதை படிக்காமே… பழைய பாட்டுன்னு
கதை உட்றே….. நீ மொதல்லே என்னோட பழைய்ய்ய்ய்ய்ய பாட்டு படி…அப்புறம் எழுது…
ஐயா கம்பரே..இவ்வளவு சொல்லிட்டீக… கொஞ்சம் ஹெல்ப் பண்ணப்படாதா???
பாக்குறதுக்கும் நோக்குறதுக்கும் வித்தியாசம் தெரியுமா???
என்ன வெளையாட்டு இது கம்பரே…ஏதோ தமிழ்லே எழுதிட்டா… இப்புடி எல்லாம்
கேக்கிறதா??? தெரிஞ்சதை சொல்றேன்…
சாதரணமா பாக்குறது..
எல்லாத்தையும்... மனசுலே பதியற மாதிரி பாக்குறது நோக்குதல்..
என்ன ஓகேவா???
வாத்தியார் மாதிரி கம்பர்:
ஓரளவுக்கு ஓகே தான்… நம்ம காவியத்திலே ஒரு சீன் வருது. ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணே பாக்குறா… நோக்குறா… ரொம்ப நேரம்…எது எது எப்படி எப்படி இருக்கனுமோ…அல்லாம் அப்படி அப்படியே இருக்கேன்னு. தெகெச்சிப் போனா… பொண்ணான என்கண்ணே வெளியே எடுக்க முடியாமே இருக்கே…ஆம்புளைங்க என்ன பாடு படுவாங்க…??
கம்பரே… இது ஏதோ…சூர்ப்பநகை சீதையெப் பாத்த கதையா இல்லே இருக்கு…!!!
அதே கதை தான்.. விடாதே பிடி…பாட்டு வேணுமா?? இதோ பிடி… ஆளை வுடு.
பண்பு உற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமை அல்லால்
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள்
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள்.
மீண்டும் கலாய்ப்போம்.