பலத்த யோசனைக்குப் பிறகு தான் நான் இந்த போஸ்டை அனுப்புகிறேன்… கொஞ்சம் கிளுகிளுப்பாய் எழுதினால் போதும்… பென்சிவேனியாவில் இருந்து.. என்ன இது மாத்ருபூதம் வாசனை அடிக்கிறதே என்ற கமெண்ட் வருகிறது..
இந்த தலைப்பும் கூட அதை ஒட்டி நினைத்து விடக் கூடாது என்பதற்குத்தான் இவ்வளவு பீடிகை..
படுக்கை எசகு பிசகாய் இருந்தால்…படுக்கையில் பாம்பு நெளியுது என்று கூறலாமா??? அந்த பாட்டின் அடுத்த வரி… தலையனை நூறு கிழியுது.. அப்படி இருந்தால் அது படுக்கையா?? அல்லது குருஷேத்திரமா???…இந்த யோசனையை அப்படியே வச்சிட்டு… கொஞ்சம் 1980 க்கு பின்னோட்டம் எடுக்கலாம்…
கோவையின் குளிரில் கல்லாரியில் படித்த வஸந்த காலம்… என் அறைத்தோழன் பெரும் படிப்பாளி… எப்போதும் படிப்பு..படிப்பு..படிப்பு தான். என்னைப்பற்றி சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்..
அதிகாலைக் குளிரில் எழுந்து படிக்க ஆரம்பித்து விடுவான். (இப்போ விடுவார் என்று தான் சொல்ல வேண்டும்).. காலையில் தூக்கும் கெட்டுப் போய் நன் படுக்கையில் பாம்பு மாதிரி நெளிவேன்.. படிக்கிற புள்ளையை கெடுக்கவும் எண்ணம் இல்லை.
ஒரு நாள் அதிகாலை கதவை திறந்து வைத்துவிட்டு லைட் எல்லாம் போட்டு எங்கேயோ என் அறை நண்பன் போக, நான் முழித்துக்கொண்டேன்.. நண்பன் வந்தவுடன்,..என்னடா இது ரூமா அல்லது தேவரடியாள் வீடு மாதிரி தொறந்து போட்டு போயிட்டியே?? என்றேன்… (இது நடந்த போது மாத்ருபூதம் பாப்புலர் ஆகாத காலம்).. அப்பொவே இப்படி கேட்ட ஆளு இப்போ மட்டும் மாத்தியா யோசிக்க முடியும்?? (ஆனால் ஒன்று மட்டும் நிஜன்.. 2011 வரைக்கும் தேவரடியள் வீட்டை இன்னும் பாத்த அனுபவம் கிடையாது)
என் அறை நண்பனுக்கோ செமையான கோபம்… பின்னே..படிக்கிற ரூமை அப்படி சொன்னா யாருக்குத்தான் கோபம் வராது. ஒரு வாரம் என் கூட பேசவே இல்லை… இருந்தாலும் என் தூக்கத்துக்கு பந்தகம் வராமல் ஒரு கயிறு என் கட்டில் மேல் வந்தது. அதில் அறை நண்பன் துண்டு கட்டி என் முகத்துக்கு ஒளி வராமல் செய்தான். அப்புறம் படிப்பே டேபிள் லேம்ப் வெளிச்சத்திற்கு மாறியது…
அன்று முதல் சற்று முன்பு வரை அந்த உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது… இப்படி படிக்கிற ரூமை தப்பா சொல்லிட்டொமே என்று.
சரி இப்போ என்ன ஆச்சி திடீர்ன்னு??? அது ஒண்ணுமில்லை… கம்பராமாயணம் படிச்சேன்…
அங்கே இதே மாதிரி ஒரு வில்லங்கமான உதாரணம் வருது… அட… இது தெரியாம நானு இத்தனை வருஷம் புலம்பிட்டே இருந்திருக்கேனே??
சரி..அந்த கம்பர் சமாச்சாரமும் தான் பாக்கலாமே…
இராமனின் பார்வையில் ஒரு நீர்நிலை படுகிறது.. அதி கொஞ்சம் கலங்கியுள்ளது. காரணம் ரெண்டு யானைகள் அதில் இறங்கி ஏறியுள்ளன. ஆனா அது எப்படி இருந்ததாம் தெரியுமா?? இரவில் ஆடவர் சந்தித்து செய்யும் புணர்ச்சியால் உடல் வருந்தி சோர்ந்த விலைமகளிரின் வடிவத்தை ஒத்து இருந்ததாம்..
பாட்டு புடிங்க..:
பொங்கு வெங் கட சரி பொதுவி ஆடலின்
கங்க்குலின் எதிர் பொரு கலவிப் பூசலில்
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய்விளை
மங்கையர் வடிவென வருந்தும் மெய்யது.
அப்போ நான் சொன்ன தேவரடியாள் வீடு மாதிரி சொன்னது எவ்வளவோ பரவாயில்லை போலே….நீங்க என்ன சொல்றீங்க…