இந்த மாதிரியான சிக்கல்கள் நமக்கு பல நேரங்களில் வந்திருக்கும். சில சமயங்களில் ஆண்டவன் அல்லது இயற்கை objective type கேள்வியாய் சந்தர்பங்களை தந்து விடும். ரெண்டில் ஒண்ணு அல்லது அதுக்கு இது பரவாயில்லை மாதிரி வந்து சேரும்.
ரெண்டிலே ஒண்ணு பாத்துட்டுத் தான் மறுவேலை என்று சொல்வதும் இதுக்குத்தானே..
எனக்கு இருந்ததே ரெண்டு வழி தான்.. அதான் வேறு வழி இல்லாமே இவளைக் கை பிடிச்சேன் என்று பேரன் பேத்தி வரும் வரையிலும் சொல்லிப் புலம்பும் ஆளைப் பாத்திருக்கோம்..
இவனுக்கு வேறு வேலை இல்லை போல… அதான்… முகநூலில் எழுதிட்டே கெடக்கான் என்ற நல்ல பேரும் (!!) எனக்கு உண்டு. Facebook ல் எழுதாதவர்கள் வேறு என்ன வெட்டி முறித்து சாதனை செஞ்சிட்டாகன்னு அவங்க தான் சொல்லனும்.
இரண்டில் ஒண்ணு… அதை என்னிடம் சொல்லு… என்னை விட்டு வேற யாரு என்னைத் தொடுவா?? என்று ஒரு சூப்பர் டி எம் எஸ் பாட்டு இருக்கு.. தலையை தலையை ஆட்டி சிவாஜி பாடும் பாட்டு இத்தனை ஆண்டுக்கு பின்னாடியும் மனசுக்குள் என்னமோ செய்யும்.
ஆனா இந்த ஆப்ஷன் சமாச்சாரத்தில் இன்னும் ஒரு நல்ல சங்காத்தம் இருக்கு. நாலு பதிலில் மூனு இல்லை என்று தெரிந்தாலும் போதும் சரியான விடைக்குப் போய் விடலாம். அப்படித்தானே பாதி பேரு கோன் பனேகா க்ரோர்பதியில் லாக்பதி ஆகி வருகிறார்கள்.
இந்த தப்பான பதிலுக்கு நெகட்டிவ் மார்க் போடும் சமாச்சாரம் தான் உலகத்தில் உதைக்கும் உத்தி.. எண்டரன்ஸ் எழுதி ஓய்ந்து போனவர்களின் தகப்பன் தாய்க்கு அந்த வலி நல்லாவே தெரியும்.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம். ஒரு அண்ணாவுடன் ஒரு மூலிகை தேடும் படலத்தில் நானும் களம் புகுந்தேன். கிட்டத்தட்ட நாலு மணி நேரம் தேடி இருப்போம். கடைசியில் நான் பொறுமை இழந்து கேட்டேன். அந்த மூலிகை இலை எப்படி இருக்கும்? என்று
எனக்கு கிடைத்த பதில் என்ன தெரியுமா??
தெரியாது.
இப்படித் தான் பலர் வாழ்க்கை எனும் வண்டி ஓடிண்டிருக்கு… என்ன செய்வது எங்கே போவது என்று கூட தெரியாமல்.
MBA பாடிச்சதாலே கொஞ்சம் நிர்வகம் பத்தியும் எழுதியாக வேணுமே!!!
ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்வி எல்லாமே நாம் நமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை எப்படி பயன் படுத்தியுள்ளோம் என்பதைப் பெறுத்து தான் அமையும்.
சைக்ளோஸ்டைல் மிஷின்களின் ஜாம்பவனாய் இருந்த ஜெஸ்டெட்டனர் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விட்டது. அதில் VRS வாங்கி வந்து Travels நடத்தும் மனிதரின் டர்னோவர் கோடிக்கு மேலாம். அதன் முதலாளி ஞாயிறு அன்று ஓட்டுனர் இல்லாததால் அவரே ஓட்டி வந்தார் பூனேயில். அஞ்சு பத்துக்கு அல்லாடும் ஆளுக்கு கோடீஸ்வரர் டிரைவர். கையில் ஐ பேடு இருந்தது ஒரு கொசுறுத் தகவல்.
இவ்வளவு சொன்ன பிறகு ராமாயணத்தை தொடாமல் விட்டால், என்னைத் தூக்கம் எப்படித் தொடும்?? உங்களுக்கு வருமா என்பது எனக்குத் தெரியாது.. என்னோட ராமாயண மெயில்கள் இல்லாமல் கொஞ்ச நாளா மக்கள் நிம்மதியா தூங்குவதாய் அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராமாயண காட்சி…
பிரபுவும் கார்த்திக்கும் மோதுவது மாதிரியான இடம். ரெண்டு பேரும் ஹீரோக்கள் தான். ஆனா ரெண்டு பேர் வாழ்க்கையிலும் சோகம்.
ராமனும் சுக்ரீவனும் தான் நான் சொல்லும் ஹீரோக்கள்.. ரெண்டு பேரும் மனைவியைப் பிரிந்தவர்கள்… ஆனா என்ன.. “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா… நெஜமாவே என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று புலம்பா குடும்பஸ்தர்கள்.. பொண்டாட்டிகளை ஊருக்கு அனுப்பிவிட்டு facebook ல் வலம் வரும் அமெரிக்க வாழ் இந்திய மக்கள் போல்… (கார்த்திக் சங்கீதா தம்பதிகள் சண்டைக்கு வராதீங்க)
அனுமன் நைஸா ஆரம்பிக்கிறார். ஏ .. ராசா… (சுக்ரீவனைப் பாத்து தான்) இவங்களைப் பாத்தா உங்க Better half ஐ தேடிக் கொடுக்கும் ஆளாத் தெரியுது. என்கெஸ்கிறார்.
சுக்ரீவனோ… இந்த ஆளே பெண்டாட்டி பறி குடுத்த ஆளு. இந்த மணுஷன் நம்ம பார்ட்டியை கண்டு பிடிச்சி தருவாரா???
சந்தேகம்.. நமக்குத்தான் வரனுமா என்ன? வானரங்களுக்கும் வந்தது. வானர அரசனுக்கும் வளர்ந்து வந்தது.
ஒரு வழியா கடைசியில் ஒரு முடிவுக்கு .. வழிக்கு வந்தனர். புரிந்தோ புரியாமலோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கை குலுக்காமலும் கையெழுத்து போடாமலும் அரங்கேறியது..
அடுத்த கேள்வி.. யாரு மனைவியை முதலில் கண்டு பிடிக்க களம் இறங்குவது…?
நம்ம எக்ஸாமிலே என்ன செய்வோம்… நல்லா பதில் தெரிஞ்ச கேள்விக்கு மொதல்லே பதில் எழுதலாம்னு தானே தோணும் எல்லாருக்கும்??
அதே… அதே தான் அந்த ரெண்டில் ஒரு ஆப்ஷன் தெரிவு செய்யும் உத்திதான் இங்கும் வருது.
ஒரு மனையாள் சிறை வைக்கப்பட்ட இடம் வாலியிடம். சீதை இடம் எங்கே என்பதே ஒன்னும் தெரியாத விடயம். என்ன செய்யலாம்?. பரீட்சை எழுதும் அதே டெக்னிக். தெரிஞ்ச இடத்துக்கு உடன் போவோம். இப்படித்தான் முடிவானது அந்த வாலியின் முடிவின் ஆஆரம்பம்.வு.
நீங்களும் இப்படி யோசிச்சி முடிவு எடுங்க… (அதுக்காக பொண்டாட்டியை தொலைச்சிட்டு வந்து நிக்காதீங்க). பிரச்சினைகளை இப்படி அலசி பாத்து முடிவு எடுங்க…
கம்பர் பாட்டு… இது உங்களுக்கு டெஸ்ட்.. யாராவது பாட்டு புடிச்சு சொல்லுங்க பாக்கலாம்.
ஹி ஹி… கமப ராமாயணம் கையயில் இல்லாமல் இந்திர சௌந்தரராஜன் எழுதிய சுந்தரகாண்டம் படிதத்ததின் விளைவு தான் இந்த போஸ்டிங்..
இதுவும்…. இப்படியும் தொடரும் (புரட்டாசியில் எது செய்தாலும் புண்ணியம் தானே???)