இராஜீவ் காந்தி அக்ஷய் ஊர்ஜா திவஸ் என்று ஒரு நாளைக் கொண்டாடுகிறார்கள்… அதில் சோலார் காற்றாலை இப்படி எத்தனையோ சொல்கிறார்கள்.. ஆனால் கண்ணிலிருந்து மின்சாரம் எடுக்கும் வித்தையை நமது சினிமாக்கள் தான் சொல்லித் தருகின்றன்…மின்சாரக் கண்ணா..என்பது அதற்கான சான்று.
திடீர் திடீரென்று மின் தடை வரும்… சங்கடமும் கூடவே வரும்.
அதுசரி… மின் தடை வரும் போது எல்லோருமே எரிச்சலின் உச்சத்திற்குப் போகும் போது நான் மட்டும், இதில் ஏதும் பாசிட்டிவ் திங்கிங் இருக்காதா என்று யோசித்தேன்.
மின் தடை அடிக்கடி ஏற்படும் வீடுகளில் சில நன்மைகளைப் பாக்கலாமே…
- 1. Advanced Planning: காற்றுள்ள போதே தூற்றுக் கொள் இது பழமொழி… கரண்ட் உள்ள போதே பயன்படுத்திக்கொள்..இது புது மொழி. பசங்களோட யூனிபார்ம்களை press செய்வது தொடங்கி, சட்னிக்கு ஆட்டுவது, மொபைல் சார்ஜ் செய்வது இதை plan செய்து செய்ய முடிகிறது.
- Outdoor Games: Comuter Games, Play Station இதை விட்டால் வேறு நாதி இல்லை என்று கிடக்கும் பசங்க.. கொஞ்சமா outdoor games எட்டிப்பார்க்கும் காலம் தான் அந்த இந்த இருண்ட காலம்.
- Cycling: நான் சைக்கிள் ஓட்டப் போறேன் என்று பெரும்பாலும் கரண்ட் இல்லாத நேரத்தில் தான் குரல் கேட்கும். நானும் இப்போ சந்தடி சாக்கில் walking போறதுக்குப் பதிலா சைக்கிளிங்க் போக ஆரம்பித்தேன்.
- Sequence of Work: எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்?..என்ற தெளிவு வந்திருக்கிறது. சில வேலைகளை கரண்ட் இல்லாத நேரத்தில் செய்யலாம் என்று ஒதுக்க முடிகிறது.
- கைவினைப் பொருள்களுக்கு ஆதரவு தரும் முகமாய் கைவிசிறி, மெழுகுவர்த்தி விற்பனை தூள் கிளப்புகிறது.
- மண்பானை யில் தண்ணி ஊத்தி வைத்து Fridge இல்லாத குறையை போக்குகிறது.
- டி வீ சீரியல்கள் பார்த்த்து உடம்பு ஊதும் அம்மனிகளுக்கு நல்ல சேதி… (போன் போட்டு கதை கேட்கும் ஆட்களை நான் இங்கு கணக்கில் சேக்கலை)… சீரியலும் கட்டு… கொரிப்பான்களும் கட்டு..
- CN, Pogo என்று அலம்பல் செய்யும் பசங்களுக்கு ஒரு விடுதலை.
- முக்கியமான சந்தோஷிக்கும் காரணம்: கரண்ட் பில் குறையும்.
- வியாபாரிகள்…குறிப்பாக Battery, UPS, Invertor தயாரிப்பாளர்கள் ஆகியோர் மகிழ்வுடன் இருக்கிறார்கள்…
இப்படியே பாசிட்டிவ் ஐடியாக்கள் தொடர்ந்து கொண்டே வருது.
அது சரி… இப்போ எதுக்கு இந்த மாதிரி எல்லாம் யோசனைன்னு கேக்கிறீங்களா??
அது ஒண்ணுமில்லை. சமிபத்தில் அந்தமான் ஆதிவாசிகள் சிலரை, இந்தியாவின் பிற மாநகரங்களை சுற்றி காட்டி அழைத்து வந்தார்கள். (அரசு விருந்தினர்களாக, அரசு செலவில்). அதில் ஒருவரின் வாயை லேசாக கிளறினேன்.
எப்படி இருந்தது Mainland Cities??
வாவ்… அருமை…அருமை..பிரம்மாண்டம். அதில் பிடிச்ச சிட்டி பெங்களூரு தான். காரணம் அங்கே இரவில் கூட இருளே வருவதில்லையே..
இது பெங்களூரு பற்றி ஓர் ஆதிவாசியின் கமெண்ட்.
அப்படியே கம்ப காலத்துக்கு வாங்க…
அங்கே நீங்க பாக்க வேண்டிய சிட்டி அயோத்தி. உங்களுக்கு அந்த சிரமம் இல்லாமல் கம்பர் போய் பாத்து எழுதி வைத்திருக்கிறார்.
அயோத்தியில் எல்லா வளங்க்களும் இருக்காம். அதனாலே அங்கே அந்த ஊரில் இருக்கும் நீண்ட சுவர்கள் எல்லாம் பளிங்கு கல் பதிச்சி வச்சிருக்காங்களாம். அதிலும் வரிசையாக பதுமராக மணிகள் பதிச்சி வச்சிருக்காங்களாம். அது அவ்வளவு ஒளி வீசுதாம். (அது என்ன பதுமராகம் என்று என் துனைவியாரிடம் கேக்கலாம்னு இருந்தேன். சன் செய்திகளில் சொல்லும் தங்கம் விலை 22000 என்று காதில் இந்த நேரத்தில், இப்படி ஏதும் எசகு பிசகான கேள்வி கேட்டு மாட்டிக்க விரும்பலை)..
இந்த மாதிரி பளிங்கு, பதுமராக ஒளி வீசுவதால் இரவில் கூட இருள் வருவதே இல்லையாம். ஒன்னும் கொஞ்சம் மேலே போய் அந்தி நேரத்தில் வரும் செவ்வானம் கூடத் தெரிவதில்லையாம்..
பாட்டு பாக்கலமா???
வளம் கெழு திரு நகர் வைகும் வைகலும்
பளிங்குடை நெடுஞ்சுவர் படுத்த பத்தியில்
கிளர்ந்து எறி சுடர்மணி இருளைக் கீறலால்
வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே.
இதைப் படிச்சி பெங்களூரு வாசிகள் சந்தோஷப் படலாம். மற்ற ஊர்க்காரர்கள்…??? அடுத்தடுத்து வரும் போஸ்டிங்க் படிங்க… அதில் உங்க ஊர் சங்கதியும் வந்தாலும் வரலாம்..
வரட்டுமா??