சமீப காலத்தில் வந்த திரைப் பாடலகளிலேயே அன்பையும் காதலையும் இழைத்து இழைத்துப் பாடிய ஒரு பாடல் எது என்று கேட்டால்…தயங்காமல் “பார்த்த முதல் நாளே..” என்ற பாடலைச் சுட்டிக் காட்டலாம். அவ்வளவு அர்த்தம்.. மெலோடி எல்லாம் அதில் இருக்கிறது. இசையும் அதற்கு தோதாக ஒத்து ஊதுகிறது (அதானே இசையின் வேலையே)
ஆனால் பார்த்த முதல் நாளே மிரண்டு போய்… காஃபியில் சக்கரை போடாலையா???….பரவா இல்லை பொண்ணே ஸ்வீட்டா இருக்கா என்று ஜொள்ளு விட்ட ஒரு விளம்பரம் தூள் கிளப்புகிறது… அதே போல் இன்னும் ஒரு விளம்பரத்தில் ஒரு டீ ஒரு வருடம் பூரா உங்கள் வீட்டிற்கு வர வேண்டுமா என்று கேள்வி கேட்கிறார்கள். திரிஷாவை வைத்து.. (அது சரி திரிஷாவை ஒரு நாள் வீட்டுக்கு டீ சாப்பிட வரவழைக்க என்ன செய்யலாம் ???)
பார்த்த மாத்திரத்தில் சில பிடிக்கிறது… பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும் என்கிறதும் இன்றைய சினிமா தான்.
இது இப்படி இருக்க… எதிர்காலத்தை நிகழ் காலமாய் நினைத்து வாழ்வதை கேள்விப்பட்டிருக்கீங்களா??? (ஜாலியா திரிஷா பத்தி எழுதினது, இந்த மாதிரி கேள்வி கேக்கத் தானா???)
அப்படி வாழ்ந்தவர் பாரதியார்.
1947, ஆகஸ்ட் 15 க்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடியவர். சுகி சிவம் இதைப் பற்றி சொல்லும் போது, இவர்கள் அதிக உயரத்தில் இருப்பவர்கள். இவர்களின் பார்வையும் விசாலமானது. சாதாரணமாய் நம் கண்ணுக்கு புலப்படாத சேதிகள் அவர் கண்ணுக்கு தெரியும் என்கிறார்.
ஈஸியா புரியணுமா?? கூகுள் மேப்பில் உலகமே சின்னதாய் தெரியிற மாதிரி.
இன்னும் சிலர் பத்தி பாக்கலாமே…
மதுரையில் புகழ்பெற்ற கல்லூரியின் பேராசிரியர் ஒருவர். மெத்தப் படித்தவர். நடந்து கொண்டே இருப்பார்… நடுவழியில் நம்பர் 1 போய் விடுவார்.
அவரை மாணவர்கள் ஒரு குரூப் போட்டோவுக்கு அழைக்கிறார்கள்… அவரும் இரண்டடி எடுத்து வைக்கிறார்.. சரி போட்டோ எடுங்கள் என்கிறார். இன்னும் போக வேண்டுமே என்கிறார்கள் மாணவர்கள். நான் அந்த குரூப்பில் தானே இருக்கிறேன் என்கிறார் அவர்.
ஏன் இப்படி நடக்கிறது இவருக்கு??
இவருடைய உடல் மெதுவாய் நடக்கிறது. மனம் வேகமாய் இயங்குகிறது.
பாத்ரூம் செல்ல நினைத்து உடல் நடக்கிறது. வேகமாய் மனம் அங்கு போய்விடுகிறது… ஆனால் உடல் அதற்குள் அங்கு செல்லவில்லை. குரூப் போட்டோ அழைப்பில் ஏற்பட்ட சிக்கலுக்கும் இது தான் காரணம்
Physical Speed & Mental Speed குழப்பங்கள் தான் காரணம்.
இந்த மாதிரி சிக்கல் இப்பொத்தான் வந்திருக்கா…??
பாரதியார் மாதிரி எதிர்காலத்தை நிகழ் காலமாய் நினைத்து வாழ்ந்தவர்கள் அந்தக் காலங்களில் இல்லையா??
எப்பொவுமே என்னோட கோணார் தமிழ் உரை ஆசிரியர் கம்பர் தான்.
இப்புடு சூடு… என்று சுந்தரத் தெலுங்கில் சொல்லி… செம்மொழித் தமிழ் பாடல் தந்தார்.
அடடே…Same Feeling…
அனுமன் முதன் முதலாய் இராமனை சந்திக்கும் இடம். பரஸ்பர அறிமுகம் முடிகிறது. விசிட்டிங்க கார்ட் முதல் இமெயில் முகவரிகள் தருகிறார்கள். ராமன் அனமனிடம் விசிட்டிங்க் கார்ட் கேட்கிறார். அந்தமான் போன்ற காடுகளில் 2011 ல் கூட அதை வைத்துக் கொள்ளாமல் இருக்காக..என்னிடம் எப்படி இருக்கும்?… அதுவும் என்னோட Boss சுக்ரீவன் இருக்க நான் விசிட்டிங்க கார்ட் வச்சிக்கிறது தப்பு.. வேணும்னா சார் கிட்டே சொல்லி வாங்கினு வாரேன்..என்று செல்கிறார் அனுமன்.
இது வரைக்கும் ஓகே… போகும் போது அனுமன் அங்கே தன் Boss சுக்ரீவன் கிட்டே போய் சொன்னது என்ன ? இது தான் இன்றைய டாபிக்.
“ஐயா… வாலி கெட்டிக்காரன் தான் ஒத்த்க்கிறேன்.. மாலையோடவே திரியும் ஆளு தான்.. அதுவும் Super Smell இருக்குது… எல்லாம் சரி. ஆனா அந்த ஆளை கொல்லும் எமன்… வந்துட்டான்யா….வந்துட்டான்யா…. நம்ம துன்பமெல்லாம் தூரமா போயே போச்சு…” அப்படீன்னு அனுமன் சுக்ரீவன் கிட்டே சொல்றான்…
என்ன உங்களுக்கும் இப்படி பாத்த முதல் நாளே, ஏதும் உங்க மனசுலே பட்சி ஏதாவது சொல்லி இருக்கிறதா???
யோசிங்க… யோசிங்க… அதுக்கு நடுவில் இந்த கம்பரோட பாட்டையும் படிச்சிடுங்க..
மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரை செய்தார்
வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன் இடர்க் கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்.
நீதி: எதிர் காலத்தை நிகழ் காலமாய் நினைத்து தேசத்திற்கு விடுதலை உணர்வினை ஊட்டிய பாரதியாரை விடுதலை நாளில் நினைவு கொள்வோம்.