தமிழ் பாட நூல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு பாடம் பண்டைக்கால அறிவியல் தலைப்பை ஒட்டியதாக இருக்கும். தமிழர்கள் அந்தக் காலத்திலேயே பல அறிவியல் நுணுக்கங்க்களை அறிந்து வைத்திருந்தனர் என்பதாகவே அந்தப் பாடம் போகும்…
அதற்கு எல்லோரும் சொல்லும் உதாரணம் அணுவைப் பற்றிய அறிவு. (அணு என்றவுடன் சுகுணா சிக்கன் விரும்பிக் சாப்பிடும் அணுஹாசன் அல்லது காஃபி வித் அணு பத்தி நினைத்து என் பேரைக் கெடுக்க்க வேண்டாம்.)
நான் குறிப்பிடும் அணு சின்ன…சின்ன..துகள் தான்.
திருக்குறளைப் பத்தி புகழ்ந்து பாடும் போது ஒரு கவிஞர்… உணர்சி வசப்பட்டு (வாலியும் வைர முத்துவும் மேடடையில் பாராட்டுவது போல்) கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்கிறார்.
அதுக்கு அப்புறம் வந்தவரோ…
அதுக்கும் கொஞ்ச்சம் மேலே போய்…. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று ஒரே போடாகப் போடுகிறார்…. இது அந்தக் காலத்தில் அணு பற்றிய அறிவு இருந்ததாய் அறிஞர்கள் கூறும் ஆதாரங்கள்..
இதற்கு முன்னர் கொஞ்சம் எடிசன் பத்தியும் கொஞ்சம் சின்ன தகவல் அறிந்து விட்டு தொடர்வோம்…
இந்த எடிஸனை அவங்க ஸ்கூல் டீச்சர் மொதோ நாளே அவங்க அம்மாவைப் கூப்பிட்டு, இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் என்று கூட்டிப் போகசச் சொல்லி விட்டார்கள். ஸ்கூல் டீச்சரே தேராத கேஸு என்று கைவிட்ட அந்த குழந்தை மட்டும் அன்று இல்லை என்றால் உலகமே இன்று இருண்டு கிடந்திருக்கும்…
நியூட்டன் பார்வை கொஞ்சம் வித்தியாசமானது. ஆப்பிள் விழுகிறது மரத்திலிருந்து…அதுக்கும் முன்னரும் பலர் அதை பாத்திருக்கிறாங்க… அவங்க பார்வையில் இந்த நியூட்டனின் மூளையில் உதித்த கேள்வி எல்லாம் வரலையே???
என் பையன் கேக்கும் கேள்வி… அந்த நியூட்டன் தலையிலே ஆப்பிளுக்குப் பதிலா…ஆப்பிள மரம் விழுந்திருந்தா… நமக்கு இந்த விதிகள் படிக்கும் விதி வந்திருக்காது… ம்..அவனவன் கவலை..அவனவனுக்கு…
என் பார்வையில் நியூட்டனின் விதிகள்… குறிப்பாக மூன்றாம் விதியினை பழந்தமிழர் அறிந்திருக்கும் ஆதாரங்கள் இருக்குமா?? கேள்வியோடு கொட்டவியும் வந்தது…
அப்படியே தூக்கம் வந்திடுச்சி…
கனவில் வந்தார் கம்பர்… (கனவிலுமா???)
என்ன என்னவோ..நியூட்டன் விதி..எல்லாம் பொலம்பிட்டே இருந்தே..என்னது அது..
அது ஒன்னும் இல்லை கம்பர் சார்… உங்களுக்கு தெரியாத சங்கதி…நீங்க போங்க..நானு தூங்குறேன்..
அடேய் பொடிப்பயலே… எனக்கே தெரியாத சங்கதியா… என்ன சமாச்சாரம் சொல்லு மொதல்லே…
நியூட்டனின் மூணாம் விதி… ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு…இது தான் சாமி…குட் நைட். கம்பராஜா…
ஹலோ..இதை நான் ராமாயணத்திலே எழுதியிருக்கேனே….. வாலி சுக்ரீவன் கூட சண்டை போட இறங்கும் சமயத்தில் நான் இந்த நியூட்டன் விதியை நியூட்டன் கண்டுபிடிக்கும் முன்பே எழுதி இருக்கேன்….
கனவு கலைந்தது…
ஓடிப் போய் இராமாயணம் தேடினேன்… அட…அப்படித்தான் இருக்கு… நீங்களும் பாருங்களேன்..
ஊழி முடிவில் வரும் அலையின் விசை ஒத்து சுக்ரீவனை அழைக்க வாலி எழுந்தானாம். அந்த விசையால் அந்த கிஷ்கிந்தா மலையே கீழே சென்றதாம். மேலும் தோள்களை உதறிய போது எழுந்த காற்றால் அந்த மலையின் பக்கத்தில் உள்ள மலைகள் எல்லாம்இடம் பெயர்ந்தனவாம்…
நியூட்டன் விதி மாதிரி இல்லே????
எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில்
கொழுந்திரைக் கடல் கிளர்ந்தனைய கொள்கையான்
அழுந்தியது அக் கிரி அருகில் மால் வரை
விழுந்தன தோள்புடை விசித்த காற்றினே..
கம்பன் ஆய்வுகள் இன்னும் வரும்.