இந்த தமிழாக்கம் சரிதானா? என்ற விவாதத்துக்கு இங்கு நான் வரவில்லை. எனவே… நேரா அது சார்ந்த ஒரு குட்டி கதைக்கு போகலாம். (குட்டி கதை என்றால் சிறிய கதை… என்ன செய்ய?? என் நெலமை இப்படி விரிவாக எழுதி புரிய வைக்க வேண்டியதாய் ஆகி விட்டது).
ஒரு ஊரில் ஒரு தொப்பி வியாபாரி ஊர் ஊராய் சுற்றி வியாபாரம் செய்து வந்தான். வெயில் கடுமையாய் இருக்க, ஒரு மரத்தடியே தொப்பியோடு கூடையை வைத்து விட்டு அருகில் உள்ள கிணத்தில் முகம் கழுவி வந்தான். திரும்பி வந்து பாத்தா… கூடையில் ஒரு தொப்பியும் இல்லே…திருடனாய் இருந்தால், கூடையோடு அல்லவா லாவிட்டுப் போயிருப்பானுங்க…அங்கும் இங்கும் பாத்தான். மேலேயும் பாத்தான்.. ஆஹா…குரங்குகளின் சேட்டைகள் அது. எல்லா குரங்கின் தலையிலும் ஒரு தொப்பி..
கொஞ்சம் பின்னோக்கி பயணித்து தன் தந்தை சொன்னதை நினைவு கூர்ந்தான்… அடேய் இப்படி எனக்கு நடந்தப்போ செஞ்சதை நீயும் செய்…
சகஜ நிலைக்கு வந்தான். முகவாய்க் கட்டையில் கை வைத்து யோசித்தான். எல்லா குரங்க்குகளும் அப்படியே செய்தன. தன் தலையில் போட்டிருந்த தொப்பியை எடுத்து கூடையில் போட்டான். எல்லா குரங்குகளும் தொப்பியை கலட்டி இறங்க, ஒரே ஒரு குரங்கு மட்டும் கூடை வரை வந்து, கூடையில் இருக்கும் தொப்பியையும் எடுத்து ஓடி மரத்தில் ஏறிக் கொண்டது..
வியாபாரி கோபத்துடன்..எங்கப்பா சொன்னபடி நீங்க நடக்கலையே…கத்தினான்…
குரங்கு பதிலுக்கு.. உங்க டாடி மட்டும் தான் ஃபிளாஷ்பேக் சொல்லியிருப்பாரா… எங்க டாடியும் எங்களுக்கு உங்கப்பா ஏமாத்தினதை பிளாஷ்பேக்கா சொல்லி இருக்கார். இனி நாங்க ஏமாற மாட்டோம்…
@@@@@@
இந்த மாதிரியான சுவாரஸ்யம் இருக்கிறதாலேயோ என்னவோ அது எல்லா படத்திலும் ஏதோ ஒரு காட்சியில் வந்துவிடும்.
பாட்டே இல்லாமல் வந்த ஒரு பழைய படத்தில் ஏகப்பட்ட ஃபிளாஷ்பேக் இருக்கும்.
ஆனா இப்போ என்னவோ தெரியலை..1980 க்கு அழைத்து செல்லும் படங்கள் சூப்பர் ஹிட் ஆகிறது. சுப்ரமண்யபுரத்தில் ஆரம்பித்து இப்போ இளையராஜா இசையை மையமாக வைத்து வந்த படமும் ஹிட்..
நானும் உங்களை ஒரு 1980களுக்கு கூட்டிப் போறேனே….
கல்லாரியில் ஒரு முறை நான் பெண்வேடம் போட்டேன். (கொஞ்சம் கலராய் இருந்து விட்டால மீசை மழிக்கும் ஆபத்து வருவதை தவிர்க்க முடியாது… சந்தடி சாக்கில் நான் கலராய் இருப்பதை சொல்லிட்டேனோ!!!)
அதில் ஒரு காட்சி. நான் லாவகமாய் நடந்து வர வேணும். பின்னால் ரோமியோக்கள் கிண்டல் அடித்தபடி வருவார்கள்.
சின்ன டயலாக்:
ரோட் சைட் ரோமியோக்கள்: அன்ன நடை; சின்ன இடை; வண்ண உடை;
பெண் வேடமிட்ட நான்: பல்லே ஒடை.
@@@@@@@
அன்ன நடை என்பது பொதுவாக பெண்கள் நடைக்கு ஒப்பு சொல்வார்கள். இதே 1980களில் வந்த ஒரு படத்தில் ஒரு பாட்டு. அதில் கதாநாயகியிடம் அன்னமே நடை பயில்வதாக வரும். அவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகுமாம்.. படத்தில் வடும் நாயகியை பாத்தால் இடுப்பு என்று ஒன்று இருப்பதாகவே தெரியாது… நீங்க ஏன் தேட்றீங்கன்னு பாக்கீகளா… தெரிஞ்சா அதைப் பத்தி உங்களுக்கு சொல்லத்தான்..
@@@@@@
ரொம்ம தூரம் பின்னோக்கிப் போனால் அங்கே கம்பன் குந்தியிருக்கார்.
கம்பன்: என்னப்பா..இன்னெக்கி என்ன ஸப்ஜெக்ட்??
நான்: ஒண்ணுமில்லே… அன்னம் பத்தி…
கம்பன்: போ..போ… பம்பைப் படலம் 7ம் பாட்டு பாரு…புக்கு இல்லையா??? அரிமலர் + அன்னம் போட்டு கூகுளாண்டவரை கூபிட்டு தேடு… என்னை கொஞ்சம் ஃபிரியா விடு..
தேடினேன்..கிடைத்தது…
இராமன் ஒரு நீர் நிலையைப் பாக்கிறான். அங்கே எல்லா இடத்திலும் தாமரை மலர்கள். அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அன்னங்கள்..அந்த அன்னங்கள் எப்பேற்பட்ட எண்ணங்களில் இருந்தன தெரியுமா?? அழகான கட்டி முடித்த கூந்தலை உடைய சீதை சென்ற இடத்தை தெரிஞ்சி சொல்ல முடியாத நாங்க எல்லாம் (அன்னங்க்கள்) இந்த இராமனின் அழகான முகத்தைப் பாக்காமே இறந்து போயிட்டா என்ன??? என்கிற யோசனையில் இருந்த மாதிரி இருந்ததாம்…
கம்பனின் கற்பனையே கற்பனை…
அரி மலர்ப் பங்கயத்து அன்னம் எங்கணும்
புரிகுழல் புக்க இடம் புகழ்கிலாத யாம்
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று
எரியினில் புகுவன எனத் தோன்றும் ஈட்டது.
ஃபிளாஷ்பேக் தொடருதோ இல்லையோ….கம்பர் கலாய்க்கல்கள் தொடரும்…