அன்னா (ஹஜாரே) என்ற ஒரு தனி நபர் இந்த தேசத்தையும் தேசத்து மக்களையும் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை உலகமே பாத்து வருகிறது. ஊன் உறக்கம் துறந்து மக்களை தட்டி எழுப்பி நிற்கும் வேகம்… அன்பு…அன்பு… தேசத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் சான்று.
தாப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் தாயின் மீது பாசமாகவும் தாய் நாட்டின் மீதும் பாசமாய் இருப்பர் என்று போன சனிக்கிழமை இந்த நாள் இனிய நாளில் சுகி சிவம் சொன்னார். நம்ம அன்னா ஹஜாரேவும் அதுக்கு விதி விலக்கு இல்லை என்று கருதலாமா???
இதே போல் கருவில் குழந்தை இருக்கும் போது தாய்க்கு என்ன பிடிக்குமோ, அது தான் குழந்தைக்கும் பிடிக்குமாம். என் பையனுக்கு சிக்கன் என்றால் ரொம்பப் பிடிக்கும். காரணம் தேடினால் வீட்டில் சண்டை தான் வருகிறது…
சீனிவாஸ அய்யங்கார் அவர்கள் தன் குழந்தை இல்லாள் வயிற்றில் இருக்கும் போது, சகல கலைகளையும் பரீட்சயம் செய்தனராம்…. அதனால் தான் அந்த குட்டி பையன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடி அப்புறம் சகலகலா வல்லவனாய் ஆனதாம்… வித்திடப்பட்ட இடம் பரமக்குடி.
தாய்ப்பாசம் அதிகம் உள்ளவர்கள் தவறான ஆட்களாகவும் இருக்க வாய்ப்பில்லையாம். புராண கால சந்நியாசிகளான ஆதி சங்கரரும் பட்டினத்தடிகளும் கூட எல்லாம் துறந்தாலும் தாய்ப் பாசத்தை துறவாது இருந்தனர்.
வீர சிவாஜி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அவரைக் கொல்ல ஒரு வீரன் வருகிறான். எதிர்பாராத விதமாக மாட்டிக் கொள்கிறான். சிவாஜி விசாரிக்கிறார். ஏன் என்னைக் கொல்ல வந்தாய்?
வீரன் சொல்கிறான்… எனக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை..இதில் என் வயதான தாய்க்கும் சோறு போட வேண்டும். பாத்தேன். உங்க எதிரி என்னிடம் வந்தான். பணம் அதிகம் தெருவதாய் சொன்னான். அட்வான்ஸ் கொடுத்தான். என் அம்மா பசி ஆறியது.. நான் உங்களைக் கொல்ல வந்தேன்.
சிவாஜியின் கண் கலங்கியது… சே..என் ஆட்சியில் இப்படி ஒரு இளைஞனுக்கு இப்படி ஒரு நிலையா என்று….
மெய்க் காப்பாளர்களைக் கூப்பிட்டான். இவனை விட்டு விடுங்கள்.. நாளை காலை சபைக்கு வரட்டும்.. மற்றதை நாளை பேசிக் கொள்ளலாம் என்றார் சிவாஜி the Great.
அமைச்சர்கள் தயங்கினர். உங்க்களை கொல்ல வ்ந்தவன். அவன் மீது நம்ம கஸாப் மீது காட்டும் கருணை மாதிரி காட்டுவது அவ்வளவு நல்லதில்லை. இவன் ஓடிப் போய் விடுவான். நாளை வரமாட்டான் என்று ஆலோசனை சொன்னார்கள்.. (யதார்த்தம் தெரிந்த அமைச்சர்கள்)
சிவாஜி ஒத்துக்கலை. தாய்க்காக என்னையே கொல்ல வந்தவன் நாளை கண்டிப்பாய் வருவான். இது சிவாஜியின் நம்பிக்கை..
அந்த நம்பிக்கை வீன் போகவில்லை. மறு நாள் வந்தான். அவன் பின்னாளில் வெற்றித் தளபதியாய் சிவாஜிக்கு உறு துணையாய் இருந்தது வரலாறு.
ஒரு துறவியைப் பார்த்து ஒரு வெளிநாட்டு யுவதி கேட்டாராம்… I want to Marry You… இப்படி நம்ம சாமியர்கள் கிட்டே கேட்டா என்ன பதில் வந்திருக்கும்??
கேமிரா இல்லாத நேரமா வா…
என் மனைவி இல்லாத நேரமா வந்து சொல்லி தொலைச்சா என்ன???
ஆனா நம்ம துறவி அந்த யுவதியைப் பாத்து கேட்டராம்…. Why do you want to marry me?
Lady: I wish to get a child like you with spritual knowledge & wisdom.
துறவி யோசித்தார்… நான் உண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் இது சாத்தியமா என்று தெரியவில்லை…. உன்னை மாதிரி அதிகமா ஆசைப்படற கொழந்தை பிறந்துட்டா???…என்ன செய்வது???
ஓகே..ஒண்ணு செய்யலாம். என்னை இப்போதே மகனாக ஏற்றுக் கொள்… தாயே… என்னை ஆசிவதி … என்று காலில் விழுந்தாராம் அந்த விவேகமுள்ள துறவி விவேகானந்தர்.
வாய்ப்பு கிடைத்தால் யாரை எப்படி மடக்கலாம் என்று இருக்கும் உலகில் தாய்ப் பாசத்தை ஒரு உன்னத வழியாய்க் காட்டிவர் அந்தத் துறவி.
கம்பர் மட்டும் அதுக்கும் சளைத்தவரா என்ன??
கொஞ்சம் கிஷ்கிந்தாவுக்கு வாங்க… அங்கே லட்சுமணன் கோபமாய் (வழக்கம் போல்) வந்து கொண்டிருக்கிறான். நடுவே வந்து இடை மறிப்பவள் தாரை… அப்போது மாமியார் கூட்டத்தின் நடுவே இருக்கும் மருமகன் போல் வெட்கிப் போய் இருந்தானாம் இலக்குவன்… பெண்களை ஏறிட்டுப் பாக்கவும் தயங்ககும் இளவல், தாரையைப் பாத்தான்… முழுமதி போன்ற முகம்…ஆனால் அது பகலில் வந்த காரணத்தால் அவ்வளவு ஜொலிக்கவில்லையாம். வாலியைப் பிரிந்த சோகம் இருக்காதா பின்னே???
அந்த நேரத்தில் நம்ம Second Hero தாரையைப் பாத்து சைட் அடிக்கவில்லை. தாரையைப் பாத்தவுடன் நம்மாளுக்கு தன் தாயாரான சுமித்திரை ஆகியோர் தான் ஞாபகத்துக்கு வந்தாகளாம்.. அப்படி வந்து வருத்தமும் கூடவே வந்ததாம்..
ஆர்க்கொலோ உரை செய்தார் என்றருள் வர சீற்றம் அஃக
பார்குலாம் முழு வெண்டிங்கன் பகல் வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை யிறை முகம் எடுத்து நோக்கி
தார்குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைத்து நைந்தான்
பண்பை வளர்க்க உதவும் காவியம் தான் கம்பராமாயணம்..