செப்டம்பரில் ஆசிரியர் தினம் வரும்.. ஆளாளுக்கு அவங்களுக்கு தெரிந்த வகையில் இன்றைய தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
சுவற்றில் எழுதாதே என்று எழுதி வைத்த காலம் போய், fb ல் என் சுவற்றில் எழுதுங்கள்.. என்று கெஞ்ச்சிக் கூத்தாடும் நிலை இன்று.
ஆசிரியர் தின வாழ்த்துகளாய் சிலரும், தங்கள் ஆசிரியரின் புகைப் படங்களோடு சிலரும், Profile Photo வையே டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ஃபோட்டாவாய் மாற்றியும் விட்டனர் சிலர்.
அப்போ நாமளும் ஏதாவது செய்யனுமில்லே… இல்லாட்டி சமூகத்தை விட்டு விலகின மாதிரி இல்லே இருக்கும்??
நானும் என் ஆசிரியர்கள் பத்தி யோசிச்சேன்.. பரமக்குடியில் தமிழ் பாடத்தை அறிவியல் போல் நடத்திய திரு இராமச்சந்திரன் அவர்களால் தான் என் தமிழ் ஆர்வம் இன்னும் குறையாமல் இருக்கு..
மேல் நிலையில் என்னை மேலும் தூக்கி விட்ட ஆ வை பள்ளியின் மணி சாரை மறக்க முடியுமா??
ஆனா வாத்தியார் என்றவுடன் எல்லாருக்கும் ஞாபகம் வருவது நம்ம புரட்சித் தலைவர் தான்.
சோ தான் வாத்தியார் என்று பெயர் வைத்தார் என்று நினைக்கிறேன் (நம்நாடு, எங்கள் தங்கம்..இப்படி பல படங்களில் சோ வை வாத்தியாரோடு பாக்கலாம்.)
ஆனா சோவுக்கு தன்னை யாராவது வாத்தியாரேன்னு கூப்பிட்டா புடிக்காதாம்!! அதைவிடக் கேவலமா சிலர் என்னை தலைவான்னு கூப்பிட்றாங்க என்பார்..
வாத்தியாரின் தலையாய கடமை என்ன??
எங்காவது அபலைப் பெண்களுக்கு ஆபத்து என்றால் ஓடி வந்து காப்பத்த வேண்டும்… இது வாத்தியார் ஸ்டைல்..
பிற்காலத்தில் இதே உத்தியை பயன்படுத்தி பல படங்களில் சீரியஸாகவும் சில படங்களில் காமெடியாகவும் கலக்கி இருக்காங்க..
விவேக் ஒரு படத்தில் நல்ல பேர் வாங்க நினைத்து உடைந்த கன்னாடித் துண்டு போட்டுவிட்டு அதனை காலில் குத்தும் தருவாயில் வாத்தியார் ஸ்டைலில் தடுக்கலாம் என்று ஐடியா செய்ய.. அது சொதப்பி செம காமெடியில் முடியும்…
நம்ம கமலின் கலக்கல் படமான அவ்வை சன்முகிவிலும் அதே டெக்னிக்… அதே சொதப்பல்…
அந்தப் படத்தில் நான் ரசித்த டயலாக்… நாசர் சொல்லும் டயலாக்…” நான் முஸ்லீம் தான்.. ஆனா மெய்யாலுமே ஊமைதான்…”
ஆனா என்னோட இப்போதைய வாத்தியார்… கம்பர் சார் தான்..
என்ன வாத்தியாரே.. கம்பர் சார்… இதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?? ராமாயணத்தில் ஏதாவது வாத்தியார் ஸ்டைல் இருக்கா.. சொல்லுங்க வாத்தியாரே…
கம்பர் தொடர்கிறார்..
நீங்க ரோட்டோரம் போயிட்டே இருக்கீங்க.. உங்களுக்கு சம்பந்தமே இல்லாமே யாரோ சிலர் ஒரு ஃபிகரை ஈவ் டீசிங்க் செய்ராங்க.. அப்போ நீங்க என்ன செய்வீங்க?? அந்த தடிப் பசங்களோட சண்டை போடுவீங்க.. அடி உதை கூட வாங்குவீங்க.. ஏன் உயிரைக் கொடுக்கவும் தயாரா இருப்பீங்க.. உலகமே இப்படி இருக்க நான் என்னை நம்பி வந்த சீதையின் துயரை போக்க முடியாத ஆளாயிட்டேனேன்னு இராமன் புலம்புறார்..
ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை
வேறு உளார் வலி செயின் விலக்கி வெஞ்சமத்து
ஊறுற தம் உயிர் உகுப்பர் என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்.
வாத்தியார் ஸ்டைலைக் கண்டுபிடித்தவர் கம்பர் தான் என்கிறேன் நான்..
என்ன… வாத்தியாரே… நீங்க என்ன சொல்றீங்க…???
Simply superb. Inspite of routine government work your brain always went around the world and took examples that are needed for human humble life and presented a pleasent way which every one should follow. In my 36 years of government service I have not come-up with such a great inventor, philosopher, guide and adviser. Some times I to had a chance to work under community people but most of the people will not speak sourashtra and even they hesitate to recognise us But u seems to be very different in all counts.
Thanks,
Parasumanna Sokkaiyer Kannan
Thanks a lot ji
jukku dhannu ji
ரொம்பவே புகழ்றீங்க…
ஏதோ பாமரத்தனமா எழுதுகிறேன். அவ்வளவு தான்